மெல்லிய மழைத்தூறல் அதனூடே எழுகின்ற புழுதி கலந்த வாசனை என
வர்ணிப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாலை நேரம். அங்கே இருந்த ஆதிகாலத்து கோயிலின் மரம்
தந்த சிறிய இடத்தில் நான் நின்று கொண்டு இருந்தேன். ஒரு வேலை தேடலுக்காக நான் வந்திருந்த
சமயம் அது. நான் செல்ல வேண்டிய இடம் ஒரு இரு மாடி கட்டடம் அதன் தரை தளப் பகுதயில்
அந்த நிறுவனம் இருந்தது. அந்த கட்டடத்தை உற்று நோக்கியபடி நான் இருந்த பொழுது அந்த
சன்னல் கம்பிகளின் இடைவெளியில் நான் ஒருத்தியை கண்டேன். தேவதைகளை யாராவது
சுடிதாரில் பார்த்திருப்பார்களா நான் என்றோ செய்த புண்ணியத்தின் பலன் அவள் என்னை
பார்த்தாள்.
Filed Under : by Gowthama shakthi
Sep 24, 2010
1 comments:
mmm.. nice...
Post a Comment